மயிலாடுதுறை என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். காசிக்குச் சமமான ஆறு முக்தித் தலங்களில் ஒன்று. திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவையாறு, ஸ்ரீவாஞ்சியம், திருச்சாய்க்காடு ஆகியவை மற்றத் தலங்கள். அம்பிகை மயில் வடிவம் கொண்டு ஆடிய தலம். மயில் வடிவம் நீங்கி அம்பாள் செய்த பிரார்த்தனைக்கு இணங்கி சிவபெருமான் இத்தலத்தில் ஆடிய நடனம் கௌரி தாண்டவம் என்று பெயர். |